புத்தளத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய 55 பௌத்த குடும்பங்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

Friday, June 28, 2019

புத்தளத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய 55 பௌத்த குடும்பங்கள்!புத்தளம் வனாத்தவில்லு பிரதேசத்தில் அமைந்து ரெட்பானகம என்ற கிராமத்தில் 55 குடும்பங்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் சிங்கள பௌத்த மக்கள் மாத்திரம் இந்த கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் தற்போது அந்த கிராமத்தில் வாழ்ந்த 55 குடுபங்கள் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் வாழும் அந்த கிராமத்து மக்கள் மீன்பிடி தொழில் மற்றும் கூலித் தொழிலை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த மக்கள் கருத்து வெளியிடும் போது, “நாங்கள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டமையினால் எங்களுக்கு பள்ளிவாசல் ஊடாக வீடு ஒன்றை பெற்று கொடுத்தனர். வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பப்பட்டதென குறிப்பிட்டனர்.

எப்படியிருப்பினும் அதன் பின்னர் அவர்களுக்கு எந்தவொரு உதவிகளையும் மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.