அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் முன் 19 ஐ நீக்கவேண்டும் - மைத்திரி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, June 26, 2019

அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் முன் 19 ஐ நீக்கவேண்டும் - மைத்திரி


நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்மைக்கு காரணம் 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதன் காரணமாக நாட்டில் இரண்டு தலைவர்கள் உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நீக்கப்படுமாக இருந்தால் அதுவே நாட்டுக்கு சிறந்தது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.