பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆயிரத்திற்கும் அதிகமானோர் இலங்கையில் இருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹஷீம் மற்றும் பிரதேச தலைலர்களின் கீழ் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் 17 பயிற்சி முகாம்கள் செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த பயிற்சி முகாம்களில் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் போது அது 1000க்கும் அதிகம் எனவும் அவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த முறையில் பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்ற தவ்ஹித் ஜமாத் தீவிரவாதிகள் பலர் தொடர்பில் பொலிஸாரிடம் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வனாத்தவில்லு, நுவரெலியா, குருணாகல், சம்மாந்துறை, அக்கறைப்பற்று, கல்முறை, ஹம்பாந்தோட்டை, கண்டி உட்பட 17 பிரதேசங்களில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது