புத்தளம் நகரில் இன்று ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்த ஐ.எஸ் இற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் புத்தளம் கிளை, புத்தளம் பெரிய பள்ளிவாசல் என்பவற்றுடன் இணைந்து புத்தளம் நகர சபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிகளவிலான பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், விமானப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான பல்வேறு சுலோகங்களையும் சுமந்தவாறு ஊர்வலவமாகச் சென்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஒன்று கூடியிருந்தனர