ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை: சிரியாவில் எரிபொருள் தட்டுப்பாடு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 1, 2019

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை: சிரியாவில் எரிபொருள் தட்டுப்பாடு


ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் காரணமாக, சிரியாவின் அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவிற்கு எரிபொருளை அனுப்புவதற்கு ஈரானிய பங்காளியான லெபனான் ஹெஸ்பொல்லாஹ் குழுவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைகள் ரஷ்யாவிற்கு ஆதரவாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், தமது நாட்டின் மீதான அமெரிக்காவின் தடைகள், நடைமுறையில் சாத்தியப்படாது என, ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.