முஸ்லிம் கிராமங்களில் அச்சம் தொடர்கிறது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 15, 2019

முஸ்லிம் கிராமங்களில் அச்சம் தொடர்கிறது

வட மேல் மாகாணத்தின் முஸ்லிம் கிராமங்களில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் காரணமாக பல பில்லியன் ரூபா சொத்து சேதங்கள் பதிவாகியுள்ள நிலையில், அக்கிராமங்களைச் சேர்ந்தவ்ர்களும், அதனை அண்மித்த அயல் கிராமங்களைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்தும் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர்.

இந் நிலையில் வன்முறைகள் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்ப்ட்டுள்ள போதும், புதிதாக வன்முறைகள் உருவாவதை தடுக்கவும், கைதுகளை துரிதப்படுத்தவும் வட மேல் மாகாணத்துக்கு நேற்று இரவு 7.00 மனி முதல் மீண்டும் காவல் துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. குறித்த ஊரடங்கு இன்று காலை 4 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் மினுவாங்கொடை வன்முறையை மையபப்டுத்தி பிறப்பிக்கப்ப்ட்ட கம்பஹா காவல் துறை வலயத்துக்கான காவல் துறை ஊரடங்கும் நேற்று இரவு 7.00 மனி முதல் பிறப்பிக்கப்பட்டது. அவை இன்று அதிகாலை 4.00 மனி வரை நீடிக்கும் என காவல் துறை பேச்சாளர்காவல் துறை அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்த நிலையில் தற்போது அது தளர்த்தப்பட்டுள்ளது.

வட மேல் மாகாணத்தின் குருணாகல், குளியாபிட்டி, நிக்கவரட்டி, சிலாபம் மற்றும் புத்தளம் காவல் துறை வலயங்களுக்கு உட்பட்ட முஸ்லிம் கிராமங்கள் வன்முறையாளர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதன்போது சிலாபம் - கொஸ்வத்த காவல் துறை பிரிவில் கொட்டாரமுல்லை பகுத்யில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதனைவிட குளியாபிட்டிய காவல் துறை வலயத்துக்கு உட்பட்ட பிங்கிரிய - கினியம, தும்மலசூரிய, ஹெட்டிபொல, வாரியப்பொல, நிக்கவரட்டிய கொட்டாம்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் கடும் சொத்து சேதங்கள் ஏர்பட்டன. அந்த கிராம், நகரங்களை அண்டியுள்ள ஏனைய முஸ்லிம் கிராமங்கள் இந்த வன்முறை நடவடிக்கையினால் அச்சத்தில் இருப்பதாக பிரதேசத்தின் மக்கள் தெரிவித்தனர்.


இந் நிலையில் அதிக சேதங்களுக்கு உள்ளான குளியப்பிட்டிய காவல் துறை வலயத்துக்கு பொறுப்பாக இருந்தகாவல் துறை அத்தியட்சகருக்கு உடன் அமுலாகும் வகையில் சேவை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

காவல் துறை ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர், காவல் துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதற்கிணங்க அவர் களுத்துறை காவல் துறை கல்லூரியின் பிரதி பணிப்பாளராக குளியாபிட்டிய காவல் துறை அத்தியட்சராக இருந்த ஓஷான் ஹேவாவித்தாரன நியமிக்கப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய பிராந்தியத்திற்கு பொறுப்பான புதிய காவல் துறை அத்தியட்சகராக நுகேகொட பிராந்தியத்திற்கு பொறுப்பான காவல் துறை அத்தியட்சகராக இருந்த சமன் சிகேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

குரித்த பிராந்தியத்தின் அமைதியை உறுதி செய்வதில் ஏர்பட்ட தவறுகள் காரணமாக இந்த இடமாற்றம் இடம்பெற்றிருக்கலாம் என பாதுகபபு தரப்பு தகவல்கள் தெரிவித்தன. எனினும் சேவை அவசியம் கருதியே இடமாற்றம் இடம்பெற்றதாக காவல் துறை தலைமையகம் கூறியது.

இதேவேளை, கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்பட்ட 5 பேர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தெல்தெனிய நீதவானும் மாவட்ட நீதிபதியுமான சானக்க கலன்சூரிய முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெனிக்ஹின்ன பகுதியில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட போது சந்தேகநபர்கள் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர். கண்டி – தம்பரெவ , கிரிமெட்டி மற்றும் பிலிவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வன்முறைகளால் சேதமாக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பில் கணக்கெடுப்புக்கள் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன. காவல் துறை நிலையங்களுக்கு இதுவரை சுமார் 200 முறைப்பாடுகள் வரை பதிவாகியுள்ள நிலையில், சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் கணக்கெடுப்பும் விசாரணைகளும் இடம்பெறுகின்றன.

இந் நிலையில் வட மேல் மாகாணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய அங்கு 5500 காவல் துறையினரும் முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.