தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹசிமின் மனைவி மற்றும் மகளை அரசியல்வாதி ஒருவர் சென்று பார்வையிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் அம்பாறை வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த இருவரையும் நலம் விசாரிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் மன்சூர் அம்பாறை வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
எனினும் அம்பாறை வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகளை அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக அவர் திருப்பிச் செல்ல நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.