ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய முன்றலில் விசேட ஆராதனை இடம்பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் பயங்கரவாத குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.
250இற்கும் அதிகமான உயிர்களை காவுகொண்ட குறித்த தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) ஒருமாதம் ஆகின்ற நிலையில், அன்றைய தினம் உயிர்நீத்த உறவுகளுக்காக இன்று நாடளாவிய ரீதியில் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில், கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய முன்றலில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அந்தோனியாரின் புனித திருச்சொரூப ஆராதனை இடம்பெற்றது.
முப்படையினரின் பாதுகாப்புடன் இந்த ஆராதனை நிகழ்வு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது