வியட்நாமில் உருவாக்கப்பட்டு வரும் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 20, 2019

வியட்நாமில் உருவாக்கப்பட்டு வரும் தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை!

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய புத்தர் சிலை வியட்நாமில் உருவாக்கப்பட்டு வருகின்றது.

சுமார் 72 மீட்டர் உயரத்தில் ‘புத்தா அமிதாபா’ என்ற புத்தர் சிலையே இவ்வாறு உருவாக்கப்பட்டு வருகின்றது.

2015 இல் ஆரம்பமாகியிருந்த குறித்த சிலையின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலையில் மொத்தமாக 13 மாடிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதில் 12 மாடிகளுக்குச் சுற்றுப்பயணிகள் செல்ல முடியும் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, வெண்கலத்தால் செய்யப்பட்ட மிக உயரமான புத்தர் சிலையும் வியட்நாமிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.