சமாதான விளக்குகளை ஏற்றுமாறு வேண்டுகோள்! - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, May 18, 2019

சமாதான விளக்குகளை ஏற்றுமாறு வேண்டுகோள்!


இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்ததில் இருந்து சமாதானத்தின் ஒரு தசாப்த காலத்தை நிறைவுசெய்து நினைவுகூரும் நாள் 2019.05.19 ஆம் நாளாகும்.

தசவர்ஷிக அபிஷேக நினைவு தினத்துடன் இணைந்து நினைவுகூரும் வகையில், நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த, முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களின் ஞாபகார்த்தமாக நாடுபூராகவும் 2019.05.19 ஆம் திகதி 07.00 மணியளவில் நாடளாவிய ரீதியில் உள்ள முப்படை தளங்களிலும் பொலிஸ் நிலையங்களிலும்,

அனைத்து வணக்கஸ்தலங்களிலும், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களிலும், வீடுகளிலும், “சமாதான விளக்கு“ எனும் தீபத்தினை ஏற்றுமாறு பாதுகாப்பு படையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்னர்.