பாதுகாப்பை தளர்த்த வேண்டாம் – படையினருக்கு ரணில் அறிவுறுத்தல் - Kathiravan - கதிரவன்

Breaking

Thursday, May 2, 2019

பாதுகாப்பை தளர்த்த வேண்டாம் – படையினருக்கு ரணில் அறிவுறுத்தல்நாடு முழுவதும், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை எந்த வகையிலும் தளர்த்த வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய எல்லா நபர்களும் கைது செய்யப்படும் வரை, பாதுகாப்பு நடைமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பின்னரான நிகழ்வுகள் குறித்து, பாதுகாப்பு படையினரால், அறிக்கை ஒன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய அனைவரையும், அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் பெற்ற பின்னரே, ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய எல்லா நபர்களும் கைது செய்யப்படும் வரை, பாதுகாப்பு நடைமுறைகளில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் கேட்டுள்ளார்.