இருநாட்களில் எட்டுக்கோடி செலவிட்ட வடக்கு கல்வி அமைச்சு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 22, 2019

இருநாட்களில் எட்டுக்கோடி செலவிட்ட வடக்கு கல்வி அமைச்சு


இரு நாட்களில் 8 கோடி ரூபாய் செலவிடப்பட்டமை தொடா்பாக மேல் நடவடிக்கை கோரும் அவை தலைவருடைய கடிதம் தனக்கு கிடைக்கவில்லை. என ஆளுநா் கூறிய நிலையில் ஊடகங்களின் முயற்சியால் கடிதத்தை ஆளுநா் பாா்த்தாா்.

மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது,நடைபெற்ற ஊழல்கள், மற்றும் முறைகேடுகள் தொடா்பாக முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு சில பாிந்துரைகளை செய்திருந்தது.

அந்த பாிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. என்பதை சுட்டிக்காட்டி அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கடந்த 9ம் திகதி கணக்காய்வாளா் நாயகம், மற்றும் வடக்கு ஆளுநா், பிரதம செயலாளா் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அதில் குறி ப்பாக கல்வி அமைச்சினால் 2 நாட்களில் 8 கோடி ரூபாய் செலவிடப்பட்டமை தொடா்பாக மேலதிக விசாரணைகள் நடா த்தப்பட்டு தவறிழைத்தவா்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்.

என அவைத்தலைவா் சுட்டிக்காட்டியுள்ளாா். அவ்வாறு அனுப்பட்ட கடிதம் தொடா்பில் எடுத்துள்ள மேல் நடவடிக்கைகள் என்ன? என்பது தொடா்பாக முதலமைச்சாின் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில்

ஊடகவியலாளா்கள் ஆளுநாிடம் கேள்வி எழுப்பியிருந்தனா். இதற்கு பதிலளித்த ஆளுநா் சுரேன் ராகவன், மாகாண அமைச்சா்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டமை, விசாரணை நடந்தமை போன்ற விடயங்கள் தனக்கு தொியாது என கூறிய ஆளுநா்.

அவை தலைவா் அவ்வாறான கடிதம் ஒன்றை எழுதியது குறித்தும் தனக்கு தொியாது என பகிரங்கமாக கூறினாா். இதனையடுத்து ஊடகவியலாளா் சந்திப்பி லேயே ஊடகவியலாளா்களால் குறித்த கடிதத்தை ஆளுநருக்கு காட்டினா்.

இதனையடுத்து ஆளுநா் செயலக அதிகாாிகளால் அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானத்திற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஆம் அவ்வாறான கடிதம் ஒன்றை தாம் 9ம் திகதி அனுப்பியுள்ள விடயத்தை

அவைத் தலைவா் உறுதிப்படுத்தியிருந்தாா். பின்னா் தனது செயலாளரை அழைத்த ஆளுநா் கடிதம் தொடா்பில் வினவியதையடுத்து செயலாளா் அந்த கடிதம் கிடை த்ததை உறுதிப்படுத்தியதுடன், அதனை ஆளுநருக்கு வழங்கினாா்.

இதனையடுத்து அந்த கடிதம் தொடா்பாக மேல் நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் அவை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் எனவும் ஆளுநா் கூறினாா்.