உத்தரவை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, May 13, 2019

உத்தரவை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை!


நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு முக்கிய உரையாற்றியுள்ளார்.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் இந்த அறிவிப்பினை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

வட மேல் மாகாணத்தில் ஏற்பட்ட பதட்டமான நிலைமை தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் வன்முறைக்கு செல்ல வேண்டாம், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உதவி செய்யவேண்டும் என பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு பதற்றத்தை ஏற்படுத்தி சில குழுக்கள் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதுவே வடமத்திய மாகாணத்திலும் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையையும் ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினரை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.