முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவுநாள் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) மாலை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு முன்றலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவு கூரப்பட்டது.
இதன்போது, பல்கலை மாணவர்களும், ஊழியர்களும் மலர்கள் தூவி, சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று தமிழர் தாயகப் பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பிரதான நினைவுகூரலில் பல பிரதேசங்களிலம் இருந்து ஒன்றுகூடிய மக்கள் கண்ணீர் மல்க தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், வெளிநாடுகளில் புலம்பெயர் உறவுகளாலும், தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புக்களாலும் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.