வீடியோவால் வந்த வினை... வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 2, 2019

வீடியோவால் வந்த வினை... வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கதிசிங்கப்பூரில் இருந்தபடி ஜாதி ரீதியாக அவதூறு வீடியோ வெளியிட்ட தமிழக பெண் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் தஞ்சாவூரின் பாப்பாநாடு காவல் சரகம் திருமங்கலக்கோட்டை மாதவன் குடிகாட்டை சேர்ந்தவர் கனிமொழி (40). இவர் சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்கிறார்.

கடந்த 23ஆம் திகதியன்று கனிமொழி சிங்கப்பூரில் இருந்தபடி ஜாதி ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இது தொடர்பாக பாபாநாடு காவல் நிலையத்தில் கனிமொழி மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று திருச்சிக்கு வந்த கனிமொழியை பொலிசார் விமான நிலையத்தில் கைது செய்தனர்.

அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரனை நடத்தப்படுகிறது.