நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல்களில் கிடைக்கும் வாள்கள் உட்பட கூரிய ஆயுதங்கள் தொடர்பாக ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக கவனம் செலுத்தி விசாரணை நடத்தி சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கண்டுபிடிக்கப்படும் வாள்கள் மூலம் முஸ்லிம் மக்கள், இலங்கையின் ஏனைய மக்களை வெட்டிக்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என கருத்து உருவாகியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இவ்விதமாக தேடுதல்களை நடத்தினாலும் இப்படியான கூரிய ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியும் எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.