பயங்கரவாதிகளால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! மற்றுமொரு புலனாய்வு பிரிவு அறிக்கை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, May 7, 2019

பயங்கரவாதிகளால் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! மற்றுமொரு புலனாய்வு பிரிவு அறிக்கை

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வெளியான மற்றுமொரு புலனாய்வு பிரிவு அறிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

எச்சரித்த போதும் அரச அதிகாரிகளால் உரிய முறையில் கருத்திற்கொள்ளாமல் விடப்பட்ட அறிக்கையே தற்போது வெளியாகியுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பிலும் அதற்கு நிதி வழங்கியவர்களாக சந்தேகிக்கப்படுகின்ற அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உயர் மட்ட பதவிகளில் செயற்படுகின்ற நபர்கள் தொடர்பிலும் புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு சில நபர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..

அரச நிறுவனங்களில் செயற்படும் இவ்வாறான நபர்களின் சட்டவிரோத செயற்பாடு தொடர்பில், புலனாய்வு பிரிவினால் உரிய அதிகாரிகளிடம் இதற்கு முன்னர் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் அவ்வாறான நபர்கள் தொடர்பில், அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சில நபர்கள் நீண்ட காலங்களாக ஒரே பதவியில் செயற்பட்டு வருகின்றனர். அதன் ஊடாக அந்த அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளவதற்கு பயங்கரவாத குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கும் அவ்வாறான நபர்களை அந்த பதவிகளில் இருந்து நீக்குமாறு புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அதிகாரிகள் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்த சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு அரசியல் அதிகாரிகளினால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.