பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியர்கள் இன்று இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு பிரித்தானிய வாக்குப்பதிவு நிலையங்களில் அனுமதிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஐரோப்பிய வாக்காளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வாக்குப்பதிவு நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு இன்னும் ஐந்து மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில் அனுமதி மறுக்கப்பட்ட வாக்காளர்கள் தமது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்