யாழ் பல்கலைகழக மாணவர்களை பிணையில் எடுக்க சுமந்திரனாலே முடியும்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 8, 2019

யாழ் பல்கலைகழக மாணவர்களை பிணையில் எடுக்க சுமந்திரனாலே முடியும்?

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை பிணை எடுக்கக் கூடிய திறமை திருவாளர் சுமந்திரன் அவர்களிடம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மூலம் கைதானவர்களுக்கு பிணை வழங்க நீதவான் நீதிமன்றதுக்கு அதிகாரம் இல்லை என்பது பலர் அறிந்த விடயம் அவ்வாறு பிணை வழங்க வேண்டுமாயின் குறித்த சட்டத்தில் அவர்கள் கைது செய்ய முடியாது என சட்டமா அதிபர் அறிவிக்க வேண்டும் இல்லையெனில் மேல் நீதிமன்றதுக்கு வழக்கு மாற்றப்பட வேண்டும்

மேல் நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்ட பயங்கரவாத சட்டத்திற்கு கீழான வழக்குகள் பல இப்பொழுதும் பிணை வழங்கப்படாமல் வழக்குத் தொடர்வதனை அவதானிக்க முடிகிறது அது வழக்கின் தன்மையைக் கொண்டது

இந்த பல்கலைக்கழக மாணவர்களது வழக்கினை தனியே சட்ட ரீதியாக அணுகினால் பிணை வழங்குவதில் கால தாமதம் ஆகலாம் இதனை அரசியல் ரீதியாகவும் அணுகினால் மட்டுமே சாத்தியம் அதிகம் இவ்வாறு ஒரு நகர்வை சுமந்திரன் அவர்கள் நகர்த்துவதாக அறிய முடிகிறது நகர்த்தக் கூடிய இடத்தில் சாதகமாக இருப்பதும் அவர் என தெரியவருகிறது

அரசியல் பிரிவினைகள் போட்டிகளை கடந்து பிணை எடுப்பதற்கு அரசியல் தரப்புக்கள் ஒன்றித்து பயணிக்க வேண்டிய தேவையும் உணரப்படுகிறது