பயங்கரவாதத்திற்கு எதிராக கொழும்பில் ஆரம்பமான போராட்டம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, May 4, 2019

பயங்கரவாதத்திற்கு எதிராக கொழும்பில் ஆரம்பமான போராட்டம்அனைத்து இன மக்களும் இலங்கையராய் ஒன்றிணைவோம் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த போராட்டம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று நடைபெற்றது.

இப்போராட்டத்தில் ‘ஒரே நாடு ஒரே குடும்பம்’ என்பதை வலியுறுத்தி கைகளில் வெள்ளை ரோஜாப் பூக்களை ஏந்தியவாறு மூவின மக்களும் ஒன்றிணைந்து பங்கெடுத்திருந்தனர். இதில் அதிகளவில் முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, ‘பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது’, ‘ஒரே நாடு ஒரே மக்கள்’, ‘எழுவோம் எதிர்ப்போம் ஒன்றிணைவோம்’, ‘நாங்கள் இலங்கையர்கள்’, ‘ஒரே இலங்கையராய் ஒன்றிணைவோம்’ போன்ற பல பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.