பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மான்செஸ்டரில் இருந்து கிரான் கேனரியா நோக்கி ரையன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டுள்ளது.
நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, அதில் பயணித்த இளைஞன் ஒருவர் திடீரென தீயணைக்கும் கருவியை கொண்டு விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார்.
அவரை சமாதானப்படுத்த முயன்ற விமானப்பணிப்பெண்ணை தாக்க முயன்றதோடு, அங்கிருந்த பயணிகள் அனைவரையும் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
45 நிமிடம் நீடித்த இந்த மிரட்டலால், விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பெரும் பதற்றமடைந்துள்ளனர்.
பின்னர் விமானம் தரையிறங்கியதும் குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.