இறுதி நேரத்திலேயே சஹரான் தற்கொலைதாரியாக மாறினார்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, May 5, 2019

இறுதி நேரத்திலேயே சஹரான் தற்கொலைதாரியாக மாறினார்?பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த சந்தேகநபர்களில் இருவர் நாவலப்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே சஹரான் நேரடியாக தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதாக முக்கிய சந்தேகநபரான மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, மற்றும் மொஹமட் இப்ராஹிம சாஹித் அப்துல்லா ஆகிய இருவருமே இவ்வாறு கடந்த கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையிலே அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது சந்தேகநபர் மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா இந்த தகவலை வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுக்கு 25 நாட்களுக்கு முன்னதாக, தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் இதன்காரணமாக ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்படவிருந்த மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டதாக இப்ராஹிம் சாதிக் தெரிவித்துள்ளார்.பிரதான சூத்திரதாரி சஹரானை தலைவர் பதவியிலிருந்து நீக்கி, அவருக்கு எதிராக தாம் குரலெழுப்பியதுடன் தங்களுக்கான வேறு தலைவரொன்றை நியமித்துக்கொண்டு, வேறொரு பள்ளிவாசலுக்கு சென்றதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே பயங்கரவாத அமைப்பின் தலைவர் சஹரானும் நேரடியாக தற்கொலை தாக்குதல் நடத்த தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டபடி தற்கொலை தாக்குதல்களை நடத்தியிருந்தால், உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்திருக்கும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 21ஆம் திகதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் காரணமாக 250 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.