கோட்டாவின் மனு மீண்டும் ஒத்திவைப்பு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 30, 2019

கோட்டாவின் மனு மீண்டும் ஒத்திவைப்பு!

டீ.ஏ ராஜபக்ஷ நினைவக நூதனசாலை நிர்மாணப்பணியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பான வழக்கு, நிரந்தர நீதாய மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுவதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த மனு அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மேன்முறையீட்டு நீதியர்சர்கள் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இதற்கமைய அந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


டீ.ஏ ராஜபக்ஷ நினைவக நூதனசாலை நிர்மாண பணியின் போது, 33.9 மில்லியன் ரூபா அரச நிதி முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக நிரந்தர நீதாய மேல்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.