தனது காதலனுடன் தொடர்பு இருப்பதாக எண்ணி பிரித்தானிய இளம்பெண்ணை கடத்திய ஜிப்ஸி இனப்பெண்: பின்னர் நடந்தவை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 8, 2019

தனது காதலனுடன் தொடர்பு இருப்பதாக எண்ணி பிரித்தானிய இளம்பெண்ணை கடத்திய ஜிப்ஸி இனப்பெண்: பின்னர் நடந்தவை!

தனது காதலனுடன் தொடர்பு வைத்திருப்பதாக தவறாக எண்ணி பிரித்தானிய இளம்பெண் ஒருவரை ஜிப்ஸி இனப்பெண் ஒருவர் கடத்தினார்.

போர்ச்சுகல்லில் உள்ள Albufeira என்னும் இடத்தில் அமைந்திருந்த மதுபான விடுதி ஒன்றில் வேலை செய்து வந்தார் South Shieldsஐச் சேர்ந்த Leighanne Rumney (22). அப்போது அவரது வாடிக்கையாளரான ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த நபர் Leighanneஐ காதலிப்பதாக கூற, மறுப்பு தெரிவித்து பின்வாங்கியுள்ளார் Leighanne.


அந்த நபர் கட்டுப்பாடுகளும் பாரம்பரியமும் கொண்ட ரோமா என்ற ஜிப்ஸி இனத்தவர். இந்நிலையில் அந்த நபரை ஏற்கனவே காதலித்து வந்த Eliana Isabel Almeida Carvalho (24) என்ற பெண், தனது காதலருடன் Leighanne தொடர்பிலிருப்பதாக எண்ணி ஆத்திரமுற்றிருக்கிறார்.

ஒருநாள் Leighanneஇன் மதுபான விடுதிக்கு வந்த Eliana, இரண்டு பேர் உதவியுடன் அவரை காரில் கடத்தியிருக்கிறார்.

அவர்கள் காட்டுப்பகுதிக்கு Leighanneஐ கொண்டு செல்ல, Eliana அவரது உடைகளை அவிழ்த்து அவரை நிர்வாணமாக்கி, அவரது முதுகில் ஏழு முறை கத்தியால் குத்தி, அவரது தலைமுடியையும் வெட்டியுள்ளார்.


பின்னர் இது ஜிப்ஸி இனத்தவர் மற்றொருவரை அவமானப்படுத்துவதற்காக செய்யப்படும் சடங்கு என்று தெரிய வந்தது.

ஆடையின்றி, இரத்தம் ஆறாக ஓட, Leighanneஐ தனியாக காட்டில் விட்டு விட்டு Elianaவும் அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து சென்று விட்டிருக்கிறார்கள்.


சுமார் 2 லிற்றர் இரத்தம் வெளியேறிய நிலையில் நிர்வாணமாக சாலைக்கு வந்த Leighanneஐ அவ்வழியே வந்த வாகன ஓட்டி ஒருவர் மீட்டிருக்கிறார். தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Elianaவுக்கு ஆறுரை ஆண்டுகாலம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தண்டனை விவரத்தை கேட்டதும் நீதிபதியைப் பார்த்து கத்திக் கூச்சலிட்ட Eliana கெட்ட வார்த்தைகளால் அவரை திட்டினார்.