மாபலகம பிரிவெனா விகாரதிபதி கொலை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, May 1, 2019

மாபலகம பிரிவெனா விகாரதிபதி கொலை!

நாகொடை பகுதியில் அமைந்துள்ள மாபலகம பிரிவெனாவிற்கு பொறுப்பான விகாரதிபதி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு 8 மணிக்கும் இன்று அதிகாலை 5 மணிக்கும் உட்பட்ட காலப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியமையினாலேயே இந்த தேரர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை தேடும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.