ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியோரின் படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் சுமார் 500 ற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 150க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 44 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பெண் உட்பட 16 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது