வடக்கை அச்சுறுத்தும் வெடிபொருட்களுடனான 20 வாகனங்கள்! – முக்கிய தகவல் வெளியீடு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, May 2, 2019

வடக்கை அச்சுறுத்தும் வெடிபொருட்களுடனான 20 வாகனங்கள்! – முக்கிய தகவல் வெளியீடு

வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்கிற்குள் பிரவேசித்துள்ளதாக கூறப்படும் 20 வாகனங்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் தொடர்பாக பாதுகாப்பு பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய 12 மோட்டார் சைக்கிள்கள், 2 வான்கள், 2 கெப் ரக வாகனங்கள், முச்சக்கரவண்டி 1, டீமோ பட்டா லொறி 1, கார்கள் 2 உட்பட 20 வாகனங்கள் வடக்கிற்குள் நுழைந்துள்ளதாக ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை அடிப்படையாகக்கொண்டு வவுனியாவில் நிரந்தர இராணுவ வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த வீதி தடைகள் நேற்று (வியாழக்கிழமை) தொடக்கம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனங்களின் இலக்கங்கள் உள்ளடங்கலான தகவல்கள் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.