கல்முனை தற்கொலை குண்டுத் தாக்குதல் - சர்வதேச பயங்கரவாத அமைப்பான IS பொறுப்பேற்றது - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 27, 2019

கல்முனை தற்கொலை குண்டுத் தாக்குதல் - சர்வதேச பயங்கரவாத அமைப்பான IS பொறுப்பேற்றது



கல்முனை - சாய்ந்தமருதில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலை சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது.

சாய்ந்தமருது வீடொன்றில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படத்தை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செய்திப் பிரிவான அமாக் (AMAQ ) வெளியிட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி தொடர் தற்கொலை தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம், கல்முனை சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை AMAQ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அபு அஹமட், அபு சுபியான் மற்றும் அபு அல் க்வாகா ஆகிய தமது இயக்கத்தைச் சேர்ந்த மூன்று போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர துப்பாக்கிகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தற்கொலை அங்கிகளை வெடிக்கச் செய்து கொண்டதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தில் பொலிஸார் உள்ளிட்ட 17 பேரை கொன்றுள்ளதாக பொய்யான தகவல் ஒன்றையும் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த தற்கொலை தாக்குதல் காரணமாக 15 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 6 தற்கொலை குண்டுதாரிகளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.