இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூறியுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேரின் புகைப்படங்களை ஆதாரங்களாக வெளியிட்டுள்ளது.
புகைப்படங்களுடன், குறித்த தீவிரவாதிகள் தாக்குதலுக்கு முன்னர் செய்துகொண்ட சாத்தியப்பிரமானத்தின் வீடியோ, மற்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள், தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்கள் உள்ளிட்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
IS தீவிரவாத அமைப்பின் AMAQ செய்தி சேவை ஊடாக இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகச் சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.
குறித்த புகைப்படத்தில் உள்ள 8 பேரில் 7 பேர் முகத்தை மறைத்துள்ளதுடன் அதில் ஒருவர் மற்றும் முகத்தைத் திறந்தவாறு காணப்படுகிறார்.
முகத்தைத் திறந்தவாறு காணப்படும் நபர் இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹசீம் எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபரும் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளபோதும், இலங்கை பாதுகாப்பு பிரிவு குறித்த தகவலை இதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.