இலங்கையில் சமூக வலைத்தளங்களை நிறுத்த பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தீர்மானம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 28, 2019

இலங்கையில் சமூக வலைத்தளங்களை நிறுத்த பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தீர்மானம்!



இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முழுமையாக இல்லாமல் போகும் நிலை உள்ளதாக இலங்கை தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கவில்லை என்றால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடு பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தும். எனவே அந்த நிறுவனங்கள் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு சேவை வழங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என இலங்கை தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

போலிப் பிரச்சாரங்கள் பரவுகின்றது என கூறி அரசாங்கம், சமூக வலைத்தளங்களை முடக்காமல், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சிறுபிள்ளைகளுக்கு உட்பட இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் பாடசாலைகளில் ICT பாடங்களின் போது இதனை தெளிவுபடுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.