மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது! வைத்தியசாலை தகவல்கள்
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த மற்றுமொருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 27ஆக உயர்ந்துள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நாவற்குடாவினை சேர்ந்த சுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் காயமடைந்த ரஞ்சித் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று (29.04.2016) உயிரிழந்தார்.