தேசியத் தலைவருக்கு எதிராக கருணாவுடன் இணைந்து செயற்பட்ட கூட்டமைப்பின் அதி முக்கிய பிரபலம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 15, 2019

தேசியத் தலைவருக்கு எதிராக கருணாவுடன் இணைந்து செயற்பட்ட கூட்டமைப்பின் அதி முக்கிய பிரபலம்

மட்டக்களப்பின் தொன்மையான 99 வீதம் தமிழ் வாக்காளர்களை கொண்ட பட்டிருப்பு தொகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் மெளணிக்கப்பட்ட பின் அதாவது 2009இல் இருந்து இன்று வரை அநாதையான தொகுதியாகவே காணப்படுகிறது.

இன்று வரை தமிழரசு கட்சிக்கென வாக்கு வங்கி உள்ள இந்த பகுதியில் வங்குரோத்து அரசியல் மேற்கொள்ளப்படுகின்றமையானது கவலையான விடயமாகும்.

இதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகிய சிலரின் செயற்பாடுகளே காரணமாக அமைந்துள்ளன.

அதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் மகிந்த ஆட்சியில் இருந்த போது அதில் முக்கிய பதவி வகித்ததாக இராசமாணிக்கத்தின் பேரன் சாணக்கியன் மீது பொதுவான குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

ஒரு வருடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளின் பேரில் தமிழரசு கட்சியில் இணைந்திருந்தார் சாணக்கியன்.

ஆனால் இவரை சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. அவர் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் முக்கிய பதவியொன்றை வகித்ததால் எந்த நேரத்திலும் அரசு பக்கம் தாவலாம் என மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் புரளியை கிளப்பிவிட்டனர்.இதனையடுதது தமிழரசு கட்சியிலுள்ள ஏனையோரும் இந்த புரளிக்கு தாளம் போட்டு சாணக்கியனை நீக்க நடவடிக்கை எடுக்கும் படி அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சாணக்கியன் தேவைதானா என்ற வினாவும், அவருக்கு எதிராக அரசியல் செய்ய யாரும் உள்ளனரா என கேள்வியும் எழலாம்.

ஆனால் இதற்கு மேற்படி மாகாணசபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களுமே முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது.

சிங்கள சமூகத்துடன் கிட்டத்தட்ட இரண்டற கலந்து விட்ட வகையில் உள்ள முன்னாள் வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வைக்க முடியும் எனில் சாணக்கியனை பட்டிருப்பு தொகுதியில் நிறுத்துவதில் என்ன தடை இருக்க முடியும்?சாணக்கியன் முதன்முதலாக இலங்கைக்கு வந்து பாட்டனாரின் நிகழ்வில் கலந்து கொண்ட போது இராசமாணிக்கத்தின் குடும்பத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாணக்கியனை அரசியலுக்கு அனுப்பலாம் என சாணக்கியனின் தந்தையிடம் தெரிவித்தபோது சீசீ இப்போது என்ன தேவை உள்ளது 15 வருடங்களின் பின் வந்தால் போதும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இளையோரை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய வேண்டிய நிலையில் தமிழ் சமூகம் உள்ள நிலையில் இவரை பயன்படுத்தலாமே என்பது பலரின் கருத்தாக உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா பிரிந்த போது தராக்கி சிவராம் எழுதிய கட்டுரைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய ஏடான பழுகாமத்தை மையப்படுத்தி வெளியாகிய ஈழநாதம் பத்திரிகையில் கருணா சார்பாக கட்டுரை எழுதிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாணக்கியன் தொடர்பில் குற்றம் சுமத்த என்ன தகுதி இருக்கிறது.

இதனால் கருணாவின் அதிக அபிமானத்தை பெற்றவர்.

இரண்டு தடவைக்கு மோலாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அவர்கள் பட்டிருப்பு தொகுதிக்கு என்ன செய்தார்கள் என தேடினால் மிஞ்சுவது அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை மாத்திரமே.

2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் அவரது பேர் தவிர்ந்த ஏனைய அனைத்து பெயர்களும் கருணாவாலே தெரிவு செய்யப்பட்டன.அக்காலப்பகுதியில் தான் விடுதலைப் புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையில் பிளவும் ஏற்பட்டிருந்தது.

அக்காலப் பகுதியில் கருணாவின் பட்டியலில் பிரதான இடம் வகித்த ஜெயானந்தமூர்த்தி, அரியநேந்திரன், தங்கேஸ்வரி, கிங்சிலி ராசநாயகம் இவர்கள் அனைவரும் கருணாவால் நேரடியாக பேர் குறிப்பிடப்பட்டு வெற்றி வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் பார்க்கப்பட்டார்கள்.

துரதிஸஷ்டவசமாக விடுதலைப் புலிகளின் தலைவர் மீது மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் கொண்டிருந்த பற்றுருதியால் கருணாவால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். பிரச்சாரத்திற்கு செல்ல முடியாது வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டிருந்தார்.

அக்காலப்பகுதியில் நடந்த தேர்தலில் கின்சிலி ராசநாயகம், ஜெயனாந்தமூர்த்தி, தங்கேஸ்வரி, கனகசபை ஆகியோர் பாரிய வெற்றியை ஈட்டியிருந்தனர்.

அந்த நேரத்தில் பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு முன்னால் கருணாவின் பின்னால் அணி திரள்வோம், வன்னி தலைமையை தோற்கடிப்போம், வன்னி புலிகளை கிழக்கில் இருந்து வெளியேற்றுவோம், கருணா அம்மானின் ஆட்சியை நிலைநிறுத்துவோம் என முழக்கமிட்டு விடுதலைப் புலிகளின் தலைவருக்கு எதிராக மிகவும் அனாகரிகமான முறையில் பேச்சுக்களை பயன்படுத்தியிருந்தார் அரியநேந்திரன்.

எனினும் ஏதொவொரு வகையில் அவர் தோற்கடிக்கப்படுகின்றார்.

இவர் நரித்தனமாக கதை கூறுவதில் மிகவும் வல்லவர். புலிகளே தம்மிடம் இரகசிய தகவல்களை கூறியதாக அன்றும் இன்றும் கூறிவருகின்றார்.

கருணாவுடன் இணைந்திருந்து வெற்றியீட்டிய பின்னர் வன்னிக்கு வர எண்ணியதாக தற்போது சாட்டு கூறுகின்றார்.அன்றையகாலத்தில் வெற்றிபெற்ற 4 வேட்பாளர்களும் வன்னிக்குச் சென்று கதைத்தார்கள்.

அதன் பின்னர் அரியநேந்திரன் வேறு வழியால் வன்னிக்கு வந்து சேர்ந்தார்.

பின்னர் கிங்சிலி ராசநாயகத்தின் இருப்பு மட்டக்களப்புக்கு ஆபத்து என பல பிரச்சாரங்களை முன்வைத்து நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

இரத்தம் தோய்ந்த சுயநலத்தோடு அரசியில் செய்கின்ற இவர் போன்ற இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சிந்திப்பவர்களே அன்றி அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் அல்லர்.

இவர் மட்டக்களப்பு மக்களுக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி தவிர்ந்து வேறு எதை செய்து கொடுத்திருக்கின்றார்.

2009 வரை கருணாவால் மட்டக்களப்புக்கு வர முடியாது என கூறிக்கொண்டிருந்த அரியநேந்திரன் 2015இற்குப் பின்னர் என்ன செய்தார்.

இவர் போன்றவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும், நாவால் மாத்திரம் தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்கும் இவரது சேவை தமிழர் அரசியலுக்கு தேவைதானா?