திருவாரூர் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, பெற்றோரின் கண்முன்னே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமையன்று பெற்றோர் வெளியில் சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை அறிந்துகொண்ட அப்பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியை அடித்து, துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சிறுமி பெற்றோரின் கண்முன்னே தீக்குளித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், தாஸ், விஜய், அஜீத், முருகேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.