குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தக் கோருகிறார் சம்பந்தன்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 21, 2019

குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தக் கோருகிறார் சம்பந்தன்!

கொழும்பிலும், மட்டக்களப்பிலும் குண்டுத் தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.

இன்றைய தாக்குதல் சம்பவங்களை அடுத்து அவர் கருத்து வெளியிடுகையில்,, கொழும்பிலும், மட்டக்களப்பிலும், தேவாலயங்கள், விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் மிகவும் வருத்தமளிக்கிறது.

இந்தக் குற்றச்செயல்களுக்குப் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமரை வேண்டிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தக் கொடூரமான குண்டுத் தாக்குதல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அந்த அறிக்கையில் வருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.