இலங்கையில் பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
தொடரும் பதற்ற நிலையை தவிரப்பதற்காக சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதற்றத்தை மேலும் கூட்டும் நோக்கில் சமூகவலைத்தளங்களில் போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல இடங்களில் இன்று பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ள நிலையில் அனைத்து பகுதியிலும் பதற்றம் நிலவி வருகின்றது.
இதனை தொடர்ந்து இலங்கையில் அவசரகால உதவிகளுக்கு தொடர்பு கொள்ள இரண்டு தொலைப்பேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளது.
+ 94777903082
+94112422788
மேலும், அவசர சேவைகளுக்கு தொடர்புகளை ஏற்படுத்த வேண்டிய இலக்கங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
110 - அவசர அப்புறப்படுத்திகள் மற்றும் அவசர ஆம்புலன்ஸ்
112 - பொலிஸ் அவசர சேவைகள் (மொபைல்)
114 - இராணுவ நடவடிக்கை அழைப்புப் பிரிவு (இலங்கை இராணுவம்)
115 - கொழும்பு மாநகர சபை நடவடிக்கை பிரிவு
116 - இலங்கை விமானப்படை அவசர சேவைகள்
117 - அனர்த்த முகாமைத்துவத்திற்கான அழைப்பு மையம்
118 - தேசிய ஆதரவு சேவை (பாதுகாப்பு அமைச்சகம்)
119 - பொலிஸ் அவசரநிலை
நீங்கள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது வெடிமருந்துகளைப் பார்த்தால், 0112434251 இராணுவ வெடிகுண்டு அகற்றல் பிரிவுக்கு தொடர்பு கொள்ளவும்.