நாட்டில் இடம்பெறும் பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு இந்திய இராணுவத்தினர் இலங்கைக்கு வரவேண்டிய அவசியமில்லையென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சி.என்.என்நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே மஹிந்த இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“குண்டு வெடிப்புச் சம்பவங்கள் குறித்து முன்கூட்டியே தெரியப்படுத்தி இந்தியா உதவியிருந்தது. மேலும் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் இந்திய படையினர் இங்கு வரவேண்டிய அவசியமில்லை. எமது நாட்டில் திறமைமிக்க இராணுவத்தினரே உள்ளனர்.
யுத்தத்தை வெற்றிகொண்ட எமது இராணுவத்தை, சிறந்த முறையில் வழிநடத்தினால் பயங்கரவாத செயற்பாடுகளை எம்மால் முறியடிக்க முடியும்” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.