முல்லைத்தீவு வைத்தியசாலையில் அரங்கேறிய கொடூரம்....கடைசி நேரத்தில் முகத்தை கூட பார்க்கமுடியாமல் கதறும் குடும்பத்தார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 19, 2019

முல்லைத்தீவு வைத்தியசாலையில் அரங்கேறிய கொடூரம்....கடைசி நேரத்தில் முகத்தை கூட பார்க்கமுடியாமல் கதறும் குடும்பத்தார்கடந்த திங்கட்கிழமை அன்று #மல்லாவி பகுதியில் #ஓர் விபத்து இடம் பெற்றிருந்தது அவ்விடத்திலே ஓர் இளைஞன் உயிர்நீத்தார். அவருடைய உடல் #முல்லைத்தீவில் அமைந்துள்ள #மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது மறுநாள் செவ்வாய்க்கிழமை அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அதாவது அவ்வுடலை யாரும் பார்வையிட முடியாத அளவிற்கு மூடி கட்டப்பட்டிருந்தது ஒரு விபத்தில் இறந்த அவருடைய உடலை ஏன் இவ்வாறு மூடிக் கட்ட வேண்டும் உடலைப் பாதுகாக்கும் இடத்தில் மின்சாரம் இல்லாத காரணமா? மருத்துவ அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருந்தமையா? அவனுடைய உறவினர்கள் கடைசி நிமிடத்தில் அவன் முகம் காண துடிப்பதை யார் அறிவார். போராட்ட காலகட்டத்தில் மாஞ்சோலை வைத்தியசாலை என்பது ஏராளமான பிரச்சனைகளுக்கு மத்தியிலும் பல உயிர்களை காப்பாற்றி நின்றது.


இது உலகறிந்த உண்மை இன்று சகல வசதிகள் இருந்தும் ஓர் உடலைப் பாதுகாக்க முடியவில்லை இது முற்றுமுழுதாக மருத்துவர்களின் கவனம் இன்மையே. இதற்கு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும் சில சந்தேகங்கள் அவருடைய உடல் பாகங்களை வைத்திய அதிகாரிகள் திருடிவிட்டார்களா? இல்லையென்றால் எதற்காக இவ்வாறு மூடி கட்டப்பட வேண்டும்? என பலர் கேள்வி எழுப்புகின்றனர்