மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் வைக்கப்படும் ரகசிய கேமரா! பெண்களே உஷார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 19, 2019

மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் வைக்கப்படும் ரகசிய கேமரா! பெண்களே உஷார்

சுவிஸில் மாணவிகள் உடை மாற்றும் அறைகளில் கெமரா வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,கால்பந்து பயிற்சியாளர் ஒருவர், பாடசாலை மாணவிகள் உடை மாற்றும்போதும் நீச்சல் குளத்தில் நீந்தும்போதும் ஷவரில் குளிக்கும்போதும் ரகசியமாக காணொளி எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

80 மாணவிகளை அவர் காணொளியாக பதிவும் செய்துள்ளார். 21 வயதான குறித்த கால்பந்து பயிற்சியாளர், குறைந்தது ஐந்து பாடசாலைகளின் மாணவிகளை Lucerne நீச்சல் குளம் ஒன்றில் காணொளி எடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர், நீச்சல் குளத்திற்கு செல்வதற்காக மாணவிகள் உடைமாற்றும் அறையிலும், நீந்துவதற்கு முன்னும் பின்னும் ஷவரில் குளிக்கும்போதும், நீச்சல் குளத்தில் நீந்தும்போதும், கெமராக்களை மறைத்து வைத்து காணொளியாக பதிவு செய்துள்ளார்.

குறித்த காணொளிகளிலுள்ள ஐந்து மாணவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.