அவளுக்கு கண்ணாடி பார்க்கவே பயம்... நண்பர்கள் இல்லை: தோல் புற்றுநோயால் அவதிப்படும் சிறுமி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 3, 2019

அவளுக்கு கண்ணாடி பார்க்கவே பயம்... நண்பர்கள் இல்லை: தோல் புற்றுநோயால் அவதிப்படும் சிறுமி

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தோல் புற்றுநோய் காரணமாக அவதிப்படும் சிறுமி தொடர்பில் நெஞ்சைப் பிசையும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் பெற்றோருடன் குடியிருக்கும் 13 வயது வஃபா என்ற சிறுமியே, தமது முகத்தையே கண்ணாடியில் பார்க்க அஞ்சி வருகிறார்.

அரியவகை தோல் புற்றுநோயால் அவதிப்பட்டும்வரும் வஃபா, வலியால் துடிக்கும்போது மொத்த குடும்பமும் ஆதரவாக அவருடன் நின்றுவருகிறது.

எல்லா சிறுமிகளுக்கும் இருக்கும் துடிப்புடன், ஏராளமான நண்பர்களுடனும் வலம் வந்த சிறுமி வஃபாவுக்கு தோல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

பகல் வெட்டமே அவருக்கு நரகவலியை அளித்துள்ளது. திடீரென்று சிறுமி வஃபாவின் தோல் கறுப்பு நிறத்தில் மாறியதால், மருத்துவர்களை காண்பித்துள்ளனர் தந்தை அப்துல் மற்றும் தாயார் நசீரா.


ஆனால் தங்கள் மகளுக்கு தோல் புற்றுநோய் என தெரியவந்ததும் இருவரும் உடைந்தே போயுள்ளனர்.

வஃபாவின் சகோதரரின் உயிரைப் பறித்ததும் இதே தோல் புற்றுநோய்தான். உடம்பில் இருந்து தொல் கீறி எடுப்பது போன்ற வலியை வஃபாவுக்கு அளித்தது அந்த நோய்.

அதுவரை கொண்டாட்டமாக இருந்த சிறுமி வஃபாவின் வாழ்க்கை மருத்துவமனை படுக்கையில் முடங்கியது.

ஆனால் தற்போது செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதற்கான தொகையை சேகரிக்கும் முனைப்பில் இறங்கியுள்ளனர் வஃபாவின் பெற்றோர்.