ஞாயிற்றுக்கிடையில் 70 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார் .
சந்தேக நபர்கள் பயங்கரவாதத்தை நாட்டுக்குள் விதைக்க முற்பட்டவர்கள் . இவர்கள் பயங்கரவாதத்திற்கு உதவுதல் மற்றும் சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பயங்கரவாத புலனாய்வு திணைக்களத்தின் (TID) காவலில் நான்கு மிக முக்கியமான சந்தேகநபர்கள் உள்ளனர். மேலும் 33 சந்தேக நபர்கள் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) காவலில் உள்ளனர். மீதமுள்ள அனைத்து சந்தேகநபர்களும் உள்ளூர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பெண்களும் உள்ளடங்குகின்றனர் .பலர் தற்கொலை குண்டுதாரிகளின் குடும்ப உறுப்பினர்களாகவும் நண்பர்களாகவும் உள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .