லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல்பார்வை சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினால் காலை 8.30 மணிக்கு இந்த முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ரஜினியுடன் இணைந்து நயன்தாரா சந்திரமுகி, சிவாஜி மற்றும் குசேலன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட வெற்றிப்படமான 2.0 வைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் ‘தர்பார்’ இல் இணைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்ளது ரஜினிகாந்த் 167 படத்தின் முதல் பார்வை!
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேகமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகின்றது. இப்படத்தின் முதல் பார்வை இன்னும் சற்றுநேரத்தில் வெளியிடப்படவுள்ளது.
2.0 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ள படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகின்றார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக ரஜினியுடன் இணைந்து நயன்தாரா சந்திரமுகி, சிவாஜி மற்றும் குசேலன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து தலைவர் 167 படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் படக்குழு தீவிரமடைந்துள்ளது. இதற்காக ரஜினியை வைத்து போட்டோஷூட் செய்யப்பட்டுள்ளது. அதன் சில ஒளிப்படங்கள் இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்னர் கசிந்தன.
இந்நிலையில் இன்று(செவ்வாய்கிழமை) காலை 8.30 மணிக்கு தலைவர் 167 படத்தின் முதல் பார்வை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பட தயாரிப்பாளரான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.