இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு சகோதரர்களும் ஈடுபட்டதாக பிரித்தானிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு ஷங்ரிலா விடுதியில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகள் இருவரும் சகோதரர்கள் என்று டெய்லி மெயில் ஊடகம் கூறுகிறது.
இதுதொடர்பான புகைப்படங்களும் காணொளியும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் இன்ஷாப் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹீம் ஆகியோர் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.