மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்வத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அனைத்தும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 26 பேரின் உடல்களே உறவினர்களிடம் இன்று ஒப்படக்கப்பட்டுள்ளதாக வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தாக்குதல்தாறி என சந்தேகிக்கப்படுபவரின் உடல்பாகங்கள் எஞ்சியுள்ளதாகவும் ஏனைய சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவைளை நாட்டில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் 290 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அத்துடன் குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடற்கூற்று பரிசோதனைகளை துரிதப்படுத்துமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, திடீர் மரண விசாரணையாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.