கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 7 பேர் இலங்கைக்கு சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகத்தை சேர்ந்த ரமேஷ், கே.எம்.லட்சுமி நாராயண், எம்.ரங்கப்பா, கே.ஜி.ஹனுமந்தராயப்பா ஆகிய 4 பேர் பலியாகி உள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா சென்ற 7 பேரில் 4 பேர் பலியாகி உள்ளனர். மற்ற 3 பேர் மாயமானதாக முதலில் கூறப்பட்டது.
அவர்களில் சிவக்குமார் என்பவரும், கர்நாடகத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரும் உயிரிழந்த தகவல் மாலையில் வெளியானது.
இறந்தவர்களின் குடும்பதிற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, வீரப்பமொய்லி எம்.பி. ஆகியோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சினிமா தயாரிப்பாளரான சி.ஆர்.மனோகர் கூறியதாவது. குண்டுவெடிப்பு நடந்த ஷாங்கரிலா ஹொட்டலில் தான் முதலில் தங்கினேன். ஆனால் அந்த அறை எனக்கு அசவுகரியமாக இருந்த காரணத்தால், அதனை காலிசெய்துவிட்டு அருகில் உள்ள ஹொட்டலுக்கு சென்று தங்கினேன்.
நான் சென்ற சிறிது நேரத்தில் ஷாங்கரிலா ஹொட்டலில் குண்டுவெடிப்பு நடந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்ததையடுத்து கர்நாடகம் திரும்பிவிட்டேன் என கூறியுள்ளார்.