முன்னாள் போராளியால் கசிந்த இரகசியம்! இராணுவத்தினர் தீவிர தேடுதல் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, April 3, 2019

முன்னாள் போராளியால் கசிந்த இரகசியம்! இராணுவத்தினர் தீவிர தேடுதல்

தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்த பெருந்தொகையான தங்க நகைகளை தேடும் பணிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, கூட்டுறவு திணைக்களத்திற்கு உரிய இடத்தில், நீதிமன்றத்தின் உத்தரவுடன் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

விடுதலைப் புலிகளின் ஈழம் வங்கி குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்துள்ளதுடன், இறுதி யுத்தத்தின் போது, வங்கியிலிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், வங்கி அமைந்திருந்த இடத்தில் புதைக்கப்பட்டதாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலின் அடிப்படையிலேயே இவ்வாறான அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.