சிறுத்தையொன்று தாக்கியதில் குமண தேசிய பூங்காவில் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை குமண தேசிய பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
சிறுத்தையின் தாக்குதலில் காயமடைந்த நபர் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுத்தையின் தாக்குதலில் காயமடைந்த நபர் பொத்துவில் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறுத்தையின் தாக்குதலில் உயிரிழந்தவர் 29 வயதுடையவரென்றும் அவரது சடலத்தை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குமண தேசிய பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.