யாழில் ஆசிரியர் ஒருவரை பதிவுத் திருமணம் செய்த நிலையில் புலம்பெயர் தமிழருடன் பெண்ணொருவர் ஓடிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் சென்று குடும்பஸ்தருடன் குறித்த 26 வயதான ஆசிரியை தலைமறைவாகி உள்ளார்.
கடந்த வருட இறுதிப் பகுதியிலேயே குறித்த பெண்ணுக்கு பதிவுத்திருமணம் நடைபெற்றுள்ளது. விஞ்ஞான பட்டதாரி ஆசிரியரான ஒருவரே அந்தப் பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், சுவிஸிலிருந்து வந்த 37 வயதான குடும்பஸ்தருடன் குறித்த பெண் தலைமறைவாகி உள்ளார்.
இதே வேளை பட்டதாரி ஆசிரியரான மணமகனுக்கு பெருமளவு சீதனம் கொடுத்தே யுவதியை பெற்றோர் பதிவுத்திருமணம் செய்து வைத்தனர் எனத் தெரியவருகின்றது.