நாட்டில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறையவில்லை - பிரதமர் ரணில் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, April 27, 2019

நாட்டில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறையவில்லை - பிரதமர் ரணில்நாட்டில் இன்னும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறையவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் பயங்கரவாதிகள் இயங்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்ட விசேட அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தீவிரவாதத் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியாமைக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், இந்த தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து தனக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சர்வதேசத்தின் உதவியுடன் சேதமடைந்த தேவாலயங்களையும் சரிவடைந்துள்ள பொருளாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்புவதுடன் பயங்கரவாதத்தை தடுப்பதற்கான அனைத்து சாதகமான விடயங்களையும் மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.