நாட்டின் பாதுகாப்பு கருதி இலங்கையில் புர்கா தடை செய்யப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
நாளைமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் முகத்தை முழுமையாக மறைக்கும் புர்கா உடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை அடையாளத்தை வெளிப்படுத்தாத வகையில் எந்த ஒருவரும் அணிகலன்களை அணியக் கூடாதென அரசு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.