வவுனியாவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம கும்பல்! கோவில் அருகில் அரங்கேறிய பயங்கரம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, April 15, 2019

வவுனியாவில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம கும்பல்! கோவில் அருகில் அரங்கேறிய பயங்கரம்

இளைஞர் குழுவினால் கார் மற்றும் முச்சக்கரவண்டி அடித்து நெறுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.வவுனியா, கோவில்குளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா கோவில்குளத்தில் தரித்து நின்ற கார் மற்றும் முச்சக்கரவண்டியை மதுபோதையில் வந்த இளைஞர் குழு அடித்து நொருக்கியுள்ளனர்.

இதன் காரணமாக கார் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இளைஞர் குழுவிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுடன் கார் மற்றும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளார்கள்.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது